காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Labour Department Tamilnadu -திருவண்ணாமலையில் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2022-10-03 00:35 GMT

தொழிலாளர் நலத்துறை அலுவலகம் பைல் படம்.

Labour Department Tamilnadu-அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கவேண்டும், அத்தியாவசிய பணிகளுக்காக திறக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அன்றையை தினம் கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் என்பது அரசு விதிமுறை. இதனை மீறும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது விதிமுறையாகும்.

அந்த வகையில் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில்  செங்கம் ,போளூர் ,ஆரணி ,செய்யாறு,  வந்தவாசி   ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான நேற்று காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

130 நிறுவனங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமல், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய தொடர்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களிலும் என மொத்தம் 72 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்து உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News