திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தலுக்கு பதுக்கி யிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Update: 2022-07-23 09:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், வண்ணாங்குப்பம் ஆத்துப்பாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 4சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

பெரியபாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250. மூட்டைகள் கொண்ட 10.டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சின்ன வண்ணாங்குப்பம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் சுந்தராம்பாள், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் சத்தியபாமா தலைமையில் போலீசார் வண்ணாங்குப்பம் ஆத்துப்பாக்கம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த 4சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல பெரிய ஆத்துப்பாக்கம் பகுதியில் செல்வம் என்பவரது வீட்டின் முன்பு ரேஷன் அரிசி மூட்டைகளை குவித்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4வாகனங்களையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்த கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News