பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.

Update: 2024-05-12 05:40 GMT

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டது. நிர்வாண நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் கடந்த 9.ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று ஆடைகள் இன்றி உடலின் பல இடங்களில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலின் முகம், காது,பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணத்தில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததால் டாஸ்மாக்கில் மது வாங்கி கொண்டு ஒதுக்குபுறமாக சென்ற பெண்ணின் பின்னால் 3இளைஞர்கள் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை அடையாளம் கண்டு காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் மதுபோதையில் இருந்த பெண்ணிடம் சூர்யா சென்று பேசி உல்லாசம் அனுபவித்த போது மேலும் இருவர் சென்றதால் பெண் மறுக்கவே அவரை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து சூர்யா,சுவேந்தர், ஜெபக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News