மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மீஞ்சூர் அருகே இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-10 05:27 GMT

மீஞ்சூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர் அருகே குண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 2ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும் புகார் கூறினார்கள்.


திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 2.ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்த நிலையில் கடந்தாண்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 16கோடி ரூபாயில் 8மாதங்களுக்குள் சாலை அமைத்து தரப்படும் என கூறியிருந்தார். மழை ஓய்ந்து 6மாதங்களான நிலையில் மீஞ்சூர் முதல் வல்லூர் சந்திப்பு வரை சாலையில் கொட்டப்பட்ட ஜல்லியில் இருந்து புழுதி பறப்பது எனவும், சேதமடைந்த சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் வரும்போது உடனடியாக சாலை அமைக்கும் நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். 2மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக இருபுறங்களிலும் சுமார் 2கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், காவல்துறையினர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று இரவே சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவதாக எம்எல்ஏ துரை.சந்திரசேகர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News