கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் 5.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூரில் 5.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் அங்கமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருட்கள் பொட்டலமாக வழங்கப்படும் வேண்டும், நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் சரியான எடையிலும் தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளர்கள் ஒவ்வொரு கடைகளிலும் நேரடியாக சென்று கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி,பருப்பு,சர்க்கரை, கோதுமை, என்ணை, போன்ற மூட்டைகளின் எடையானது சரியாக உள்ளதா என்று நுகர்வோர் துறை அதிகாரிகள் எடை நிறுத்தம் செய்த பிறகே நியாய விலை கடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கடைகளில் பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடை செய்ய வேண்டும், கடைகளில் இருப்பு அதிகமாக இருந்தால் அதற்கு அபராதம் விதிப்பதை கைவிடப்பட்டு பழைய நடைமுறைப்படி இருப்பில் அவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு எதிராக கோஷங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், ஆர்.கே பேட்டை வட்டாரத் தலைவர் கஜேந்திரன், சத்துணவு மாநில பொருளாளர் ரங்கநாதன்,ஆர் ஆர் ரவி, பள்ளிப்பட்டு, தேவநேசம்,அன்பு, ரமேஷ்,லட்சுமி மாவட்ட அமைப்பு செயலாளர்சதாசிவம்.
ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.