திருவள்ளூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!

திருவள்ளூர் அருகே பட்டறை பெருமந்தூரில் நான் முதல்வன் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பங்கேற்றார்.

Update: 2024-05-10 01:30 GMT

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த உயர்கல்வி  வழிகாட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பேசினார். 

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும்” 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024” நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்றமாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிகனவு 2024” நிகழ்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான “கல்லூரிக்கனவு 2024” நிகழ்வானது 08.05.24 அன்று தலைமைச் செயலாளர் தொடங்கி வைத்தார்.


மாணவர்களாகிய நீங்கள் வாழ்வின் முக்கியமான மைல்கல் வந்துள்ளீர்கள். பள்ளிப் பருவம் எளிமையான பாதை அதை எளிதில் கடந்திருப்பீர்கள். உயர்கல்வி என்பது பல்வேறு வழித்தடங்கள் கொண்டது. தமிழ்நாடு தான் எழுத்தறிவு படிப்பறிவு பெற்ற மாநிலத்தில் 100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உள்ளது. உயர்கல்வியில் 53 சதவீதம் உள்ளது. உயர்கல்வி படிப்பதனால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதை ஏற்படும். உயர்வு கல்வி படிக்கும் காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் உங்களின் தனித்திறமையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தொடர்ந்து முகுந்த் எந்தப் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் குறித்தும், எத்துராஜ் கல்லூரி பேராசிரியர் சுஜாதா கலை தொடர்பான படிப்புகள் குறித்தும், ஐ என் ஜி கல்லூரி பேராசிரியர் பி தேவராஜ்,அறிவியல் தொடர்பான படிப்புகள் குறித்தும், திருவள்ளூர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி , அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் விஜய கார்த்திக், மற்றும். ஐ என் ஜி கல்லூரி பேராசிரியர் ராஜகுரு ஆகியோர் மனிதநேயம் மற்றும் சட்டப் படிப்புகள் குறித்தும் கருத்துரை வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், உதவி இயக்குனர் திறன் மேம்பாட்டு பயிற்சி ரவீந்திரன் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் மற்றும்திருவள்ளுரில் உள்ள 500 க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News