விபத்து இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

அரசு பேருந்து மோதி விபத்தில் பலியான குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பேருந்து ஜப்தி.

Update: 2021-02-12 16:41 GMT

2014 ஆம் ஆண்டு தேனி - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் அரப்படிதேவன்பட்டியை சேர்ந்த ரமேஷ் எனபவர் சென்ற போது தேனி நோக்கி வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். இந்த விபத்தில் பலியான ரமேஷின் மனைவி உமாபிரியா நீதிமன்றத்தில் அரசு பேருந்து நிர்வாகம் இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி, பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு பின்பு கடந்த ஆண்டு விபத்தில் பலியான குடும்பத்திற்கு 24 லடசம் ரூபாய் வழங்க உத்தரவிட்டும், கடந்த ஓராண்டாக இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மேலும் கால அவசாகம் வழங்கி 25,59,618 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அரசு பேருந்து நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்காததால் பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திலகம் இன்று இரண்டு அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் அமீனா ரமேஷ் தலைமையில் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்ல இருந்த ஒரு அரசுப் பேருந்தை ஜப்தி செய்த நிலையில் பெரியகுளம் அரசு பேருந்து பணிமனை கிளை மேலாளர் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததன் அடிப்படையில் ஒரு பேருந்தை மட்டும் ஜப்தி செய்து நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றனர்.

Similar News