கும்பக்கரை அருவி மீண்டும் திறப்பு - பயணிகள் மகிழ்ச்சி

Update: 2021-02-01 08:30 GMT

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. தேனி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இப்பகுதியில் கொரோனா பெருந்தொற்றால் கடந்தாண்டு மார்ச் முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நோய்த்தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் 11 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டதால் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அருவி பகுதிக்கு செல்வதற்காக வனத்துறை சார்பில் இன்று முதல் மின்சார வாகனமும் இயக்கப்பட்டுள்ளது.‌ 11 மாதங்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News