பெரியகுளம்: மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார் ஓபிஎஸ்

பெரியகுளம் தொகுதியில் 3அம்மா மினி கிளினிக்குகள் மற்றும் ரூ.40.58லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

Update: 2021-01-30 16:54 GMT

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில்  25 அம்மா மினி கிளினிக்குகள், 4 நடமாடும் அம்மா மினி கிளினிக்கள் இதுவரையில்  திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.

   முதலாவதாக பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி, குள்ளப்புரம் மற்றும் சருத்துபட்டி ஆகிய 3இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்  திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குள்ளப்புரம் பகுதியில் ரூபாய் 9.0 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் வடபுதுபட்டி அம்மா ரூபாய் 31.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடங்கள் என ரூபாய் 40.58 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

     இந்த நிகழ்வுகளில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ்,  கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News