திருட்டுக்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தும் கிராம ஊராட்சிகள்

தேனி மாவட்டத்தில் கிராமங்களில் நடைபெறும் திருட்டுக்களை தடுக்க ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

Update: 2021-07-18 08:45 GMT

பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.  

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகளவி்ல் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க நகர்பகுதிகளில் வசதியான குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இதனால் திருடர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளையே குறி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து போலீசார் இரவு ரோந்து சென்றாலும், திருடர்கள் பதுங்கியிருந்து போலீசாரிடமிருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். இந்த பிரச்னைக்கு கண்காணிப்பு கேமரா பொறுத்துவதே நிரந்தர தீர்வு என போலீசார் கிராம மக்களிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில், கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகங்கள் மூலமும், ஸ்பான்சர்கள் மூலமும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதேபோன்று அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News