ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் திட்ட பணியாளர்கள்

நூறு வேலை திட்டத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள்,அடையாள அட்டைகொண்டு வராத தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதைக்கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது

Update: 2021-07-23 09:45 GMT

ரெங்கசமுத்திரம் கிராம ஊராட்சியில் நுாறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட, ரெங்கசமுத்திம் கிராம ஊராட்சியில், இ்ன்று காலை வழக்கம் போல் நுாறு நாள் வேலை  திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், வேலை திட்டத்தில், வழங்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு வராத பணியாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டனர். தவிர, குறிப்பிட்ட நேரம் வேலை செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவு வேலை செய்து முடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

திடீரென ஆய்வுக்கு வந்து,  வேலைக்கு வந்தவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு, கட்டுப்பாடுகளை விதித்த அதிகாரிகளை கண்டித்து, நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன்  அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, ஆப்சென்ட் போடப்பட்ட பணியாளர்களுக்கும் இன்று சம்பளம் வழங்குவதாகவும், வேலை விஷயத்தில் அரசு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், சமரசம் செய்து  பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News