போலி பட்டா வாங்கித் தருவதாக 70 லட்சம் மோசடி: 15 பேர் மீது வழக்கு பதிவு

போலி பட்டா வாங்கித்தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சார்பதிவாளர், இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2021-08-18 14:15 GMT
பைல் படம்

அரசு இடத்திற்கு போலி பட்டா வாங்கித்தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தாசில்தார், சார்பதிவாளர், கலெக்டர் அலுவலக உதவியாளர், இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்ய ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மனைவி உமாமகேஷ்வரி, 43. இவரிடம் சின்னமனுாரை சேர்ந்த புரோக்கர் ராஜா என்பவர், 2018ம் ஆண்டு அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளார். போலி பட்டா தயார் செய்து கொடுத்துள்ளனர். நிலத்தை பதிவு செய்யவில்லை.

இது குறித்து உமாமகேஷ்வரி, புரோக்கர் ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து தன்னை ஏமாற்றியதாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், ஆண்டிபட்டி துணை தாசில்தார், சார்-பதிவாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் புகார் செய்து ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மகேந்திரவர்மா புகாருக்கு உட்பட்ட 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்துமாறு ஆண்டிபட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News