சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்க தடை

மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் சின்னசுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2021-07-19 12:30 GMT

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும்பெரும் வெள்ளமாக  மாறும்  வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அருவிகளில் குளிக்க முழு அளவில் அனுமதி வழங்கப்படவில்லை. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் ஏராளமான கிராமங்களும் அமைந்துள்ளன. இவர்கள் இப்பகுதியில் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, இங்குள்ள சின்னசுருளி அருவிக்கு வெளிப்பகுதி மக்கள் வராவிட்டாலும், இங்குள்ள கிராம மக்கள் சென்று குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது மேகமலையில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மழை தொடர்வதால் எந்த நேரமும் சின்னசுருளி அருவியில் பெரும் வெள்ளம் வரும் வாய்ப்புகள் உள்ளதால், மலைக்கிராம மக்கள் கூட சின்னசுருளி அருவியில் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் மலைக்கிராம மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். யாரும் குளிக்க செல்லாத வகையில் அங்கு பாதுகாப்பிற்கு வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News