சேலம் அருகே பூலாம்பட்டியில், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமானதால், பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.;
விசைப்படகு இயக்கப்படாமல், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த காட்சி.
விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
கடந்த சில மாதங்களாக தொடரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டியில் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமானதால் பூலாம்பட்டிக்கு வரும் தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டையில், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, கரையோரத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், படகில் பயணிக்க ஆசைப்பட்டு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.