சேலத்தில் 26 பஸ் ஸ்டாண்டுகளில் டிரைவர்களுக்காக நீர்மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ். பவுடர்

சேலத்தில் வெப்பத்திற்கு எதிரான நடவடிக்கை, பஸ் டிரைவர்களுக்கு நீர்மோர் வழங்கல்;

Update: 2025-03-27 08:50 GMT

சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் கீழ் இயங்கும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 26 பஸ் நிலையங்களில் நேற்று முதல் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு நீர்மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பவுடர் பாக்கெட்களும் வழங்கப்படுகின்றன. இந்த சேவை கோடைக்காலம் முழுவதும் தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து பஸ் நிலையங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News