நெல் இயந்திரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய குடோன் பொறுப்பாளர் இடமாற்றம்
ஆத்தூரில், விதி மீறி நெல் இயந்திரம் பயன்படுத்திய ஊராட்சி முன்னாள் தலைவருக்கு நடவடிக்கை;
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் நெல் கொள்முதல் மையத்தில் இருந்த நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை த.மா.கா. கட்சியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள் தனது பெட்ரோல் பங்குக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆத்தூர் வாணிப கழக கிடங்கு மேலாளர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கிடங்கு பொறுப்பாளர் தர்மன் வரகூர் நெல் கொள்முதல் மையத்திற்கும், காவலாளி பூவரசன் ஒதியத்தூர் மையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், ஒன்பது மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள் தலைவரிடம் விசாரிப்பதற்காக விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வாணிப கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.