தலைமை ஆசிரியர் அறையில் குடிநீர் குழாய் உடைப்பு

தலைவாசல் பள்ளியில் குடிநீர், குழாய் உடைப்பால் தேர்வு விடைத்தாள் பாதிப்பு;

Update: 2025-03-27 10:00 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் பிளஸ் 2 மாணவர்களின் தேர்வுகள் நிறைவடைந்த பின்னர் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. தேர்வு முடிந்த பிறகு சில மாணவர்கள் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து பேனாவை உடைத்துள்ளதுடன், கை கழுவும் இடத்தில் உள்ள குடிநீர் குழாயையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறி தலைமை ஆசிரியர் அறையில் தேங்கியதால் 10ம் வகுப்பு மாணவர்களின் மாதிரி தேர்வு விடைத்தாள்கள் நனைந்து சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இச்செயலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிவதற்காக ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News