தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தமிழரசுக்கு குண்டர் சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது;

Update: 2025-03-27 09:00 GMT

கொலை வழக்கில் கைதான தமிழரசு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோடு, திண்டல் காரப்பாறை புதுகாலனியை சேர்ந்த ஸ்ரீதர் (28) என்பவர் ஏ.சி மெக்கானிக் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 24ம் தேதி, அவர் நண்பர்களான தமிழரசு (28) மற்றும் பாலமுருகன் (29) ஆகியோர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், தமிழரசு, பாலமுருகனை தாக்கியதாக புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழரசை தேடி வந்த ஈரோடு தாலுகா போலீசார், பிப்ரவரி 26ம் தேதி ஸ்ரீதர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, தமிழரசு அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழரசை கைது செய்த போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவரான தமிழரசு, தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழரசு மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்க ஈரோடு எஸ்.பி. ஜவகர் பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் ஏற்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீசார் தமிழரசுக்கு நேற்று வழங்கினர்.

Tags:    

Similar News