புதுக்கோட்டையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் : மாணவர் கோரிக்கை நிறைவேற்றிய கலெக்டர்

புதுக்கோட்டையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் மாணவர் கோரிக்கையை கலெக்டர் உமாமகேஷ்வரி நிறைவேற்றினார்.;

Update: 2021-05-27 04:00 GMT

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி லெட்சுமணப்பட்டி மாணவனின் இல்லத்திற்கே சென்று கல்வி  உதவித்தொகையினை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் மாணவன் தேர்தலுக்கு முன்பாக தமக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முகாமில் தற்போதைய முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அந்த மாணவனின் கோரிக்கை தற்போது மாவட்ட நிர்வாகத்தால் பரிசீலனை செய்யப்பட்டு அது ஏற்புடைய கோரிக்கை என்பதால் இன்று புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி லெட்சுமணப்பட்டியில் உள்ள அந்த மாணவனின் இல்லத்திற்கே நேரில்சென்று கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.

இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில்:தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ளபொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன்படி 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான நலத்திட்ட உதவிகளைவழங்கும் வகையில் இதற்கென புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறையின் கீழ்புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப்பட்டி கிராமத்தைசேர்ந்த குறளரசன் என்பவர் பட்டப்படிப்பு பயில்வதற்கு உதவித் தொகை வேண்டிஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இம்மாணவரின் கோரிக்கைமனுவினை வருவாய்த்துறையினர் மூலம் உடனடியாக பரிசீலனை செய்து கல்விஉதவித்தொகை பெற இவர் தகுதியுடையவர் என கண்டறியப்பட்டது.

தற்போதுதளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளதால் லெட்சுமணப்பட்டியை சேர்ந்த குறளரசனுக்கு இன்றையதினம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்கல்வி உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாகஇம்மாணவருக்கு தேவையான கல்லூரி கட்டணத்தை வழங்குவதற்கு வங்கிகள்மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்பொழுது தளர்வில்லா ஊரடங்கு காலக்கட்டம் என்பதால் வருவாய்த்துறையினர் மூலம் மனுதாரர்களின் வீடுகளுக்கே சென்று தகுதியானமனுக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ்பொதுமக்கள் வழங்கிய மற்ற மனுக்களின் மீதும் தீர்வு காண உரியநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்

Tags:    

Similar News