விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அளிப்பு

புதுக்கோட்டை அருகே நேரி்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டது

Update: 2023-12-30 15:15 GMT

 விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி ,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா ஆகியோர்நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்

நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி ,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா ஆகியோர்நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த மற்றும் இலேசான காயமடைந்து, புதுக்கோட்டை அரசு

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை, மாவட்டவருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா ஆகியோர் இன்று (30.12.2023) நேரில் சந்தித்துஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலைசென்னை மற்றும் திருவள்@ர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள், தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி கொண்டிருந்த போது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பனஞ்சேரியை சேர்ந்த பா. ஜெகநாதன் ( 60) சீனிவாசன்  மனைவி .சாந்தி ( 55), திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த ரா. கோகுலகிருஷ்ணன் ( 26)  மற்றும் சென்னை மாவட்டம், அமைந்தகரையைச் சேர்ந்த ச. சதீஷ் ( 25) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்திதெருவைச் சேர்ந்த ஜெ. சுரேஷ் ( 39), என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் இவ்விபத்தில் 5 நபர் களுக்கு பலத்த காயமும், 14 நபர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனடிப்படையில்  தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சமும், பலத்த காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சமும் மற்றும் இலேசான காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50,000 -மும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சத் திற்கான காசோலைகளையும் மற்றும் லேசான காயமடைந்த 14 நபர்களுக்கு தலா ரூ.50,000 -க்கான காசோலைகளையும்,

மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா  ஆகியோர் இன்று (30.12.2023) நேரில்  சந்தித்து ஆறுதல்கூறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்து, காசோலைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர்  இந்திராணி, வட்டாட்சியர்கள் கவியரசன் (புதுக்கோட்டை), புவியரசன் (திருமயம்), முள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதீஸ்வரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News