காலிப்பணியிடங்களை நிரப்ப கால்நடை பராமரிப்பு அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் கோரிக்கை

துறையில் பணிபுரிந்து வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் கண்காணிப்பாளர்பதவி உயர்வு வழங்க வேண்டும்

Update: 2023-12-30 16:00 GMT

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது .

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் அஸ்வின் குமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம், தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயமணி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சங்கர், கால்நடை துறை மேனாள் மாநில தலைவர்கள் மணி மற்றும் செல்வமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில பொருளாளர் கார்த்திக் நன்றி உரையாற்றினார்.

கூட்டத்தில் சுந்தர்ராஜன், சின்னையாசாமி, சசிகுமார் முத்துக்குமார், கபில்தேவ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட பிரதிநிதிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. துறையில் பணிபுரிந்து வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் கண்காணிப்பாளர்பதவி உயர்வு வழங்க வேண்டும்.

2. இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்கள் அனைவருக்கும் உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

3.டிஎன்பிசி மூலம் 20 நேரடி உதவியாளர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

4. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

5.சரண்டர் விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும்.

6.துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகளான ரமேஷ், ஆனந்த், முத்து கருப்பன் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News