காவல்துறை சித்ரவதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்பு..!

மதுரையில், காவல்துறை சித்ரவதைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு துவக்கி வைத்து பங்கேற்றார்.

Update: 2022-07-03 08:54 GMT

தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு.

தமிழக காவல்துறை மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பு சார்பில் மதுரையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், காவல்துறை சித்ரவதையை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி.,சைலேந்திர பாபு, மதுரை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் காந்தி பேசுகையில், தேசிய குற்றப் புலனாய்வுக்கூடம் அறிக்கையின்படி 2001-2020 வரை நாடு முழுவதும் 1,888 சித்ரவதை மரணங்கள் ஏற்பட்டுள்ளது.அதில் காவல்துறையினர் 893 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் தமிழக காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க தமிழக டி.ஜி.பி.,41 வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளார். இதனை கடைப்பிடித்தாலே காவல்நிலையங்களில் சித்ரவதை மரணங்களை தடுக்க முடியும் எனவும் புள்ளி விவரங்களுடன் மதுரை உயர்நீதிமன்றக்கிளை வழக்கறிஞர் காந்தி கூறினார்.

Tags:    

Similar News