திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி கார்த்திகேயன்

திருச்சி துப்பாக்கி சுடும் 2 பதக்கம் வென்ற ஐஜி கார்த்திகேயன்இரண்டு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-04-28 14:13 GMT

திருச்சி ரைபிள் கிளப்பிற்கு சுழற்கோப்பை வழங்கிய மத்திய மண்டல போலீஸ் ஐஜி கார்த்திகேயன்.

திருச்சி மாநகர கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப் 31 -12 -2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட,தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சூடு போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நிர்வாகத்தின் கீழ் இந்த ரைபிள் கலப்பு செயல்பட்டு வருகிறது.

இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சூடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 27/4/2024 மற்றும் 28 -4 -2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது/

இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள் எனவும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத் ,ஜூனியர் ,சீனியர் மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளில் கலந்துகொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடும் பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சூடுதல் போட்டியில் பங்கு பெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இப் போட்டியில் வெற்றி பெற்ற 76 நபர்களுக்கு தங்க பதக்கமும் 69 நபர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் 50 நபர்களுக்கு வெண்கல பதக்கமும் ஆக மொத்தம் 195 வெற்றி பெற்ற நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற திருச்சி ரைபிள் கிளப்பிற்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் சுழற் கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News