காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நாமக்கல் : காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பரமசிவம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள்:
- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
- புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்
- கிராம உதவியாளர்கள் ஓய்வு பெறும் போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்
மொத்தம் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் முடிவுகள்:
பிப். 5-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம், 27-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.