சரக்கு டெலிவரி செய்யும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
குமாரபாளையத்தில் சரக்கு டெலிவரி செய்யும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.;
சரக்கு டெலிவரி செய்யும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் - குமாரபாளையத்தில் சரக்கு டெலிவரி செய்யும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் சேலம் சாலையில் சுமார் இரண்டு கி.மீ தூரம் டிவைடர் அமைக்கப்பட்டதால், சாலையின் அகலம் குறைந்தது. இதில் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கும் போது , தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். மேலும் ஒவ்வொரு கடையிலும் பொருட்கள் இறக்க வரும் சரக்கு லாரிகள் வந்து நின்று, பொருட்களை இறக்கி விட்டு செல்லும் வரை, அந்த சாலையில் வரும் வாகனங்கள், செல்ல முடியாமல், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஊருக்குள் சரக்கு லாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் சரக்குகள் இறக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்திட வேண்டும்.