அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.;
அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. மாவட்ட திறன் மேம்பாட்டு திட்ட அலுவலர் பார்த்திபன் கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர் வித்யா, சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுனர், கோவை ஆர்.வி.எஸ். கல்லூரி வேலைவாய்ப்பு இயக்குநர் மஞ்சு, மாவட்ட தொழில் மையம் நிர்வாகி அசோகன், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னேற்ற திட்ட பயனாளர்கள் வினோத்கண்ணன் ஆகியோர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முதல்வர் ரேணுகா பேசியதாவது:
நெதகி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாளாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இங்கு நடப்பது எங்கள் கல்லூரிக்கு நல்ல உதயம். நமது மாவட்ட கலெக்டர் ராணி மங்கம்மாள் போல் நல்ல ஆளுமைத்திறன், பன்முகத்திறன் மிக்கவர். அவரது திறமையான நிர்வாகத்தில் அனைத்து துறைகளுக்கும் மிகுந்த பலன் கிடைத்து வருகிறது. அரசு கல்லூரி மாணவர்களுக்காக கலெக்டர் செய்து வரும் உதவிகள் மாணவ சமுயதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியை ஆங்கில துறைத் தலைவர் பத்மாவதி தொகுத்து வழங்கினார்.