ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுமக்கள் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் நேரில் புகார்

குமாரபாளையத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம், ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.;

Update: 2025-01-23 16:45 GMT

ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுமக்கள் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் நேரில் புகார்

குமாரபாளையத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம், ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

குமாரபாளையம் எடப்பாடி சாலையில் காவேரி நகர் பாலம் அருகில் ரவுண்டான அமைத்து, சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைகளை அமைத்து, தங்கள் கடமைகள் முடிந்தது என தற்காலிகமாக பணிகளை செய்து வருகின்றனர். எனவே குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து காவிரி நகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பொதுநல கூட்டமைப்புகள் சார்பில் , கண்டன ஆர்பாட்டமும் நடந்தது.

இதையடுத்து, நேற்று மாலை 05:00 மணியளவில் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் மாவட்ட கலெக்டர் உமா நேரில் ஆய்வு கொண்டார். பொதுமக்கள் கலெக்டரிடம், ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், அதனை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் கூறியதாவது:

ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க கலெக்டரிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அது நடக்குமா? என்று தெரியவில்லை. மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தா விட்டால், இது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின் அரசு மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News