திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சிறப்பாக தொடங்கிய கோ பூஜை..!

பழமையான இந்த காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா 2025 பிப். 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இதனையொட்டி, காந்தி ஆசிரமத்தில் சிறப்பு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.;

Update: 2025-02-07 05:30 GMT

நாமக்கல் : திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். பழமையான இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா 2025 பிப். 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, காந்தி ஆசிரமத்தில் சிறப்பு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. இதில், ஆசிரமத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ஆசிரம நிறுவனரான மூதறிஞர் ராஜாஜியின் சிலைக்கு, ஆசிரம அறங்காவலர் பொன். கோவிந்தராசு கதர் மாலை அணிவித்தார்.

ஆசிரமத்துக்கு நிலம் வழங்கிய ரத்தினசபாபதி கவுண்டர் சிலைக்கு சித்தளந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இளமாறன், புதுப்பாளையம் முருகேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஆசிரமத்தில் உள்ள செல்வ விநாயகர், ஆஞ்சனேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காந்தி ஆசிரம நூற்றாண்டையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவது எனவும், விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விழாவில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News