அரசு மானியத்தில் பட்டு நெசவு இயந்திரம் பெற அழைப்பு..!
அரசு மானியத்தில் பட்டு நெசவு இயந்திரம் பெற அழைப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ், பெங்களூருவில் இயங்கி வரும் மத்திய பட்டு வாரியத்தின் மூலம், சில்க் சமாக்ரா-2 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கங்கள்:
பட்டு உற்பத்தியை அதிகரித்தல்
பட்டு கைத்தறி தொழிலில் புதிய தொழிற்நுட்பங்களை புகுத்தி, பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுகிறது.
நெசவாளர்களின் பணியை எளிமைப்படுத்துதல்
நெசவாளர்களின் நெசவுப் பணியை எளிமைப்படுத்தி, அவர்களது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்
பட்டு கைத்தறி நெசவாளர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மானியத்துடன் இயந்திரங்களை வழங்குதல்
5-வது நிதிக் குழுவில், பட்டு நெசவுத் தொழிலுக்கான இயந்திரங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன் நெசவாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
மானிய விபரங்கள்
♦ 2 பட அமைப்பு ₹1,20,000 50% 25% 25%
♦ 4 பட அமைப்பு ₹1,80,000 50% 25% 25%
5. கூடுதல் தகவல்களுக்கு
மானிய விலையில் வழங்கப்படும் பட்டு நெசவு இயந்திரங்கள், அவற்றின் விலை மற்றும் மானிய விபரங்கள் குறித்து மேலும் தகவல் பெற, குமாரபாளையம் தாலுகா, எலந்தக்குட்டையில் உள்ள கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள
♦ நேரில் சென்று
♦ தொலைபேசி: 8300031750
♦ இமெயில்: adhandloomstgode@yahoo.com
மலிவு விலை செயற்கை நார் ஜவுளிகள், பட்டு போன்ற இயற்கை நார் ஜவுளிகளுக்கு சவாலாக உள்ளன. இந்நிலையில் தரத்தையும் புதுமையையும் கட்டிக்காத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் நம் பட்டு கைத்தறி துறையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார் நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள்.