நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் சூழ்ந்த கடும் பனிமூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகின்றது.;
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகின்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிமூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்ய முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள், மேலும் தங்களது வாகனங்களில் விளக்குகளை எரிய விட்டபடி சாலையில் சென்றனர்.