நாமக்கல் மாவட்டத்தில் இன்று 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 76 மையங்களில், இன்று 17,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.

Update: 2021-08-21 02:15 GMT

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 76 மையங்களில், இன்று 17,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.

இன்று நடைபெறும் முகாமில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் மையங்கள்விபரம்:

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: அரியாகவுண்டம்பட்டி, காட்டூர், ஆயில்பட்டி, வடுகமுனியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளிகள், ஏரிக்கரை அங்கன்வாடி மையம்.

கொல்லிமலை வட்டாரம்: செம்மேடு அரசு ஆஸ்பத்திரி, ஆலவாடி தொடக்கப்பள்ளி, பல்லக்குழி துணை சுகதார நிலையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பள்ளிப்பட்டி, வெண்டாங்கி, கொண்டமநாய்க்கன்பட்டி தொடக்கப்பள்ளிகள், பெருமாப்பட்டி சுகாதார மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: திப்ரமாதேவி அங்கன்வாடி மையம், பொட்டிரெட்டிப்பட்டி, வரகூர் தொடக்கப்பள்ளிகள், கங்காநகர் துணை சுகாதார நிலையம்.

மோகனூர் வட்டாரம்: நன்செய் இடையார் கண்டர் பள்ளி, காளிபாளையம் தொடக்கப்பள்ளி, மோகனூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர், தோளூர் அரசு பள்ளிகள்.

நாமக்கல் வட்டாரம்: கொளந்தாபாளையம், ராசாகவுண்டனூர், அப்பிநாய்க்கன்பாளையம், கொசவம்பட்டி, கருப்பட்டிபாளையம், பெரியப்பட்டி அரசு பள்ளிகள். எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (2வது தவணை மட்டும்).

திருச்செங்கோடு வட்டாரம்: கருமகவுண்டம்பாளையம், மோடமங்கலம், வட்டூர் பெத்தாம்பட்டி அரசு பள்ளிகள், மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்டிவி மேல்நிலைப்பள்ளி.

பரமத்தி வட்டாரம்: வாவிபாளையம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிகள், லாரி உரிமையாளர்கள் சங்கம் பிள்ளைகளத்தூர், வேலூர் தெற்குத்தெரு அரசு தொடக்கப்பள்ளி.

கபிலர்மலை வட்டாரம்: பெரியசோளிபாளையம், ஒரம்பூர், சோளசிராமணி அரசு பள்ளிகள், ஆனங்கூர் சமுதாயக்கூடம், பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

பள்ளிபாளையம் வட்டாரம்: மக்கிரிபாளையம், புதுப்பாளையம், சானார்பாளையம், தொட்டிபாளையம், செங்குட்டபாளையம் தொடக்கப்பள்ளிகள், பாப்பம்பாளையம் உயர்நிலைப்பள்ளி, பள்ளிபாளயைம் ரங்கநாதர் திருமண மண்டபம், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி.

வெண்ணந்தூர் வட்டாரம்: அக்கரைப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், காந்தி கல்வி நிலையம், ஆலம்பட்டி அங்கன்வாடி மையம். அலவாய்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், கட்டநாச்சம்பட்டி தொடக்கப்பள்ளி.

இராசிபுரம் வட்டாரம்: பெரும்பாளி, பட்டணம் தொடக்கப்பள்ளிகள், பெரியூர் சுகாதார மையம், ராசிபுரம் சேக்ரட் ஹார்ட் பள்ளி, வி.நகர் நடுநிலைப்பள்ளி.

புதுச்சத்திரம் வட்டாரம்: களங்கானி, காரைக்குறிச்சிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நைனாமலை அடிவாரம் பள்ளிப்பட்டி, தானதாம்பட்டி, ராமநாய்க்கன்பட்டி தொடக்கப்பள்ளிகள்,

எலச்சிபாளையம் வட்டாரம்: மானத்தி, வேலகவுண்டம்பட்டி, கீழப்பாளையம் தொடக்கப்பள்ளிகள், அக்கலாம்பட்டி, செக்கன்காடு சுகதார நிலையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: ஹரிஜன் காலனி, கூத்தாநத்தம், வையப்பமலை தொடக்கப்பள்ளிகள், பருத்திப்பள்ளி இ-சேவை மையம்.

மேற்கண்ட மையங்களில் 17,500 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 

Tags:    

Similar News