முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-11-21 14:30 GMT

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழாவில் பேசும்போது, தமிழகத்தில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் படித்து சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் முதல்வர்மருந்தகம்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் இம்மாதம் 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், வருகிற நவ. 30ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News