தூள் கிளப்பிய கார் விற்பனை ! இந்த அக்டோபரில் அமோகம் ! | Increase in car sales in October

கடந்த 2023 வருடத்தை விட இந்த 2024 வருடம் அக்டோபரில் இந்தியாவில் கார் விற்பனையானது அதிகரித்துள்ளதை பற்றிய முழுமையான தகவல்கள் . | Increase in car sales in October;

Update: 2024-11-22 03:00 GMT

இந்தியவில் தசரா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் புதிய வாகனங்களை வாங்குவது என்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.மக்களும் இந்த வழக்கத்தையே கொண்டுள்ளனர் ,இது மட்டுமின்றி புதுமையான பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றன. இதனை நோக்கமாக வைத்து விற்பனையாளர்களும் வியாபாரத்தை பெருக்குவதற்கு பலவகையில் ஆஃபர்களை அள்ளி கொடுத்து விடுகின்றனர். அந்த வகையில் இந்திய வியாபார சந்தையில் கார்களும் பைக்குகளும் அதிகளவு விற்பனை செய்யபட்டது.

அதன் படி FADA அறிவித்த அக்டோபர் மாதத்திற்கான கார் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அறிவித்த தகவலின் படி இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 4,83,159 கார்கள் விற்பனை செய்யபட்டு உள்ளதாகவும்(Increase in car sales in October), இது கடந்தாண்டை விட சுமார் 32.38% அதிகமானதாக இருப்பதாக அறிவித்து உள்ளது .முக்கியமாக புதிய கார்களுக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகவும் SUV வகை கார்களுக்கும் இந்த பண்டிகை காலத்தில் அதிக ஆர்வத்துடன் குறிப்பிட தாக்க ஒன்றாக உள்ளது .

மாருதி சுசூகி | Marutisuzuki

மாருதி சுசுகி நிறுவனம் கார் விற்பனையில் இந்த அக்டோபர் மாதத்தில் அதிகளவு கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் உள்ளது.மாருதி, 35.13% வளர்ச்சி கண்டு 2024 அக்டோபரில் 1,99,675 கார்களை விற்பனை செய்து அமோக வரவேற்பை பெற்று உள்ளது .குறிப்பாக கடந்தாண்டை விட 51,913 கார்களை மாருதி சுசூகி நிறுவனம் அதிகம் விற்றிருக்கிறது. 2024 செப்டம்பரில் மாருதி 1,13,560 கார்கள் விற்பனை செய்து உள்ளது. அதாவது கடந்த மாதத்தின் மொத்த கார் விற்பனையில் 41.33% பங்கு கார்களை சுசூகி நிறுவனம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது,அதே போல் மாதாந்திர விற்பனையில் 75.83% வளர்ச்சியும் கொண்டுள்ளதாக தகவல்ககள் உள்ளது.

ஹூண்டாய் | Hundai

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து படியாக விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் கார் வகைகள் ஆகும். ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வென்யூ கார்கள் இந்தியாவில் அதிகம் விரும்பும் எஸ்யூவி கார்களாக விளங்குகின்றன.கடந்த அக்டோபர் மாதத்தில் 55,568 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்ததாகவும். 2023 அக்டோபர் மாதத்தில் 55,128 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது 1% அதிகரித்துள்ளஹதாகவும் கூறுகின்றனர்,இவ்வாறு இருக்கையில் கார் விற்பனையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகளவில் கார் விற்பனை செய்து இரண்டாம் இடத்தில் இந்த ஹூண்டாய் நிறுவனம் சிறந்து விளங்குவதாக கூறப்படுகின்றது.

டாடா | Tata

இந்திய நிறுவங்களில் சிறப்பு வாய்ந்து விளங்க கூடிய முக்கியமான ஒன்றாக இருப்பது தான் இந்த் டாடா நிறுவனம் இந்த டாடா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 41000 கார்களை விற்றுள்ளது இதே போல்

இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அதன் விற்பனையாக 65,011 கார்களை விற்பனை செய்து உள்ளது குறிப்பிட தக்கதாகவும் உள்ளது. இந்த தகவலின் படி இந்தாண்டு கார் விற்பனை பட்டியலில் 3 வது இடத்தை இந்த டாடா நிறூவனம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

மகேந்திரா | Mahindra

செப்டம்பர் மாத கார் விற்பனையில் அதிகளவு கார் விற்பனையை பெருக்கி முன்னேறி வந்துள்ளது மகேந்திர நிறுவனம் ,இந்த வகையில் இந்த வருட அக்டோபரில் மகேந்திரா நிறுவனம் தனது விற்பனையை பெருக்கி 58,120 கார்களை விற்று முடித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாத விற்பனையை விட 20,843 கார்களை விற்று சாதனை படைத்து,இந்தியாவில் கார் விற்பனையில் 4 வது இடத்தை இந்த மகேந்திரா நிறுவனம் பெற்று மேலும் தன்னுடைய பலத்தை காண்பித்து உள்ளது.

கியா | Kia

கியா கார்கள் அக்டோபர் 2024 விற்பனை 28,545 யூனிட்களை எட்டியது, இது 30% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது கியாவின் அக்டோபர் 2024 உள்நாட்டு விற்பனை 22,753 யூனிட்களாக இருந்தது, இதன்படி கார் விற்பனையில் போட்டிபோட்டு கொண்டிருக்கும் நிறுவனங்களில் சிறப்புவாய்ந்த ஒரு நிறுவனமாக இந்த கியா நிறுவனம் இந்தண்டு அக்டோபர் மாத பண்டிகை கால கார் விற்பனையில் தனது திறனையோ காண்பித்து 5 வைத்து இடத்தில் இந்த கியா நிறுவனம் உள்ளது .

குறிப்பாக இந்த வருடம் அனைத்து மாதங்களை விட இந்த அக்டோபர் மாதம் மட்டுமே  கார்களின் விற்பனை அதிகரித்து உள்ளதாக விவரங்கள் உள்ளன.மேலும் இதுபோன்ற தகவலைகள் மற்றும் விவரங்களை அந்தந்த நிறுவனங்களில் தளத்தில் முழுமையான தகவல்களை தெறிந்துகொள்ளுங்கள்.


Tags:    

Similar News