ஆயுர்வேத முறையில் உங்க உடலை அழகாக பாதுகாக்க ..!ஆரோக்கியமான முறையில் உங்களுக்கான சில வழிகள்..! | Wellhealth ayurvedic health tips in tamil
ஆயுர்வேத முறையில் உங்க உடலை அழகாக பாதுகாக்க உங்களுக்கான சில வழிகள் பார்க்கலாம்.
இப்ப இருக்க காலகட்டத்தில் வேகமா ஓடுறோம் தவிர நம்பள நம்ப உடலை பாத்துக்காம இருக்கோம். சாப்ட எது இருந்தாலு சாப்டோம் வயிறு நிறைஞ்சுருச்சு ஓடுறோம். அதனால எனக்கு அந்த நோய் இந்த நோய் பொலம்புறோம்.அதுக்கு தான் நம்ப பழங்கால முறை படி ஆயுர்வேத(Ayurvedic) முறையை ஃபாலோ பண்ணுங்க. அதுக்கு அப்புறம் நோய் வராது நீங்க வேலைக்கு கவலை இல்லாம போலாம்.கவலை எதுக்கு அதுதான் ஆயுர்வேதம்(Ayurvedic) இருக்கேWellhealth ayurvedic health tips in tamil .இதை மட்டும் கட்டாயம் நீங்க செய்னும். அப்போதான் நம் குழந்தைகளும் பார்த்து கத்துப்பாங்க.பாஸ்ட் புட் வேண்டா வேணும் சாப்டா அப்றம் நீங்க வேகமா நோயினால் பாதிக்கப்படுவீங்க. அதனால இந்த டிப்ஸ் இனிமே ஃபாலோ பண்ணுங்க.ஆயுர்வேதம்(Ayurvedic) அப்டினா என்ன..? தெரியவில்லையா வாங்க பார்க்கலாம்.
ஆரோக்கியமான முறையில் ஆயுர்வேதம் | Wellhealth ayurvedic health tips in tamil
ஆயுர்வேதம்(Ayurvedic) அப்டினா மருத்துவ முறைதான் ஆனால் அது மருத்துவரிடம் செல்ல தேவை இல்லை. நம்ப உடம்பு நம்ப தான் பாக்கணும் நெனச்சு. காலை முதல் இரவு வரை நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் தான் ஆயுர்வேதம்(Ayurvedic).
1. தினசரி வழக்கம் | Daily Routine
காலை எழும் நேரம் 5-6 க்குள் இருக்க வேண்டும். எழுந்த உடனே மொபைல் பார்க்க கூடாது.எழுந்த உடனே முகம் கழுவி பல் துலக்கிய பிறகு தான் டீ , காபிக்கு பதில் மிதமான அளவு சுடு தண்ணீர் குடித்து. பிறகு நமது கழிவுகளை அகற்ற வேண்டும்.பிறகு குறைந்தது 10 - 15 நிமிடம் யோகா , நடைப்பயிற்சி அல்லது உங்க வீட்டு வேலையை செய்தாலே போதும். உங்க உடல் மற்றும் மனம் நிம்மதி அடையும்.அதன் பிறகு தூய நீரில் குளித்து தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.இதை தினசரிDaily Routine செய்தால் என்றும் இளமை தான். அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கும் நம் உடல்.
2. ஆயுர்வேத முறையில் உணவு | Food in the Ayurvedic Way
நாம் குளிப்பது , பல் துலக்குவது அதுல மட்டும் நம்ப உடம்ப காக்க முடியாது. சரியான உணவு முக்கியம்Food in the Ayurvedic Way.அதனால் ஆயர்வேத முறையில் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் முன் முருங்கை கீரை சூப் குடிக்கவும். இதனால் உடலுக்கு ரத்தம் , இரும்புசத்து போன்ற சத்துக்கள் கிடைக்கும். பிறகு சாப்பிடும் போது குறைந்த சாப்பாடு அதிக பொரியல், பழம் வைத்து சாப்பிடலாம்.
உணவும் சத்தான அந்தந்த பருவக்காலத்துக்கு நம் உடலுக்கு சேரும் உணவை அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.தண்ணீரில் சீரகம் , நெல்லிக்காய் சேர்த்து குடிக்கலாம்.அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உணவை மெதுவாக மென்று ஒவ்வொரு கடியையும் ருசித்து சாப்பிடுங்கள்.
ஆயுர்வேத முறையில் உடல் எடை குறைக்க முடியுமா..| Ayurvedic tips for weight loss
1.ஆயுர்வேத முறையில் சரியான செரிமானம் | Proper Digestion in the Ayurvedic Way
சாப்பிடுவது சரியாக செரிமானம் ஆகுதா என பாக்கணும். சாப்பிட்டு அடுத்தடுத்து சாப்பிட்டே இருக்க கூடாது. செரிமானம் ஆக அது வேலை செய்யும். கிரைண்டர் மாறி அரைச்சுட்டே இருக்க கூடாது. அப்பரும் பல் கூட பாதிக்கும்.வழக்கமான நேரத்தில் மூன்று ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.கொத்தமல்லி, பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் ஏலக்காய் போன்ற மூலிகை மருந்துகள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு இரைப்பை அசௌகரியத்தை குறைக்க உதவுகின்றன.நல்ல சத்தான உணவு சாப்பிட்டு இதை கடைப்டித்தால் உடல் எடை குறையும்.
2. தூக்கம் மற்றும் ஓய்வு | Sleep and Rest
எவ்வளவு வேலை பார்க்கிறோமோ அவ்வளவு நம் உடலுக்கு ஓய்வு தர வேண்டும். 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். மொபைல் பார்க்காமல் தூங்கினால் கண் பாதிப்பு வராது. தூக்கம் மற்றும் ஓய்வுSleep and Rest இதை சரியாக செய்தால் உடல்நலம் பாதிக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் எடையும் சீராக இருக்க உதவும் .
3.உடற்பயிற்சி | Exercise
யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகள்Exercise மூலம் சுறுசுறுப்பாக இருங்கள். யோகா கலோரிகளை எரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனம் நன்றாக இருந்தால் உடல் எடை சரியாக இருக்கும்.
ஆயுர்வேத முறையில் முடி உதிர்தலை கட்டுப்படுத்துதல் | Ayurvedic remedies for hair loss
நீங்கள் கற்றாழை, கறிவேப்பிலை, செம்பருத்தி, நெல்லிக்காய் , வெந்தயம் , தேங்காய் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தலாம். அவை தலைக்கு ஊட்டமளிக்கும். இந்த மூலிகைகளை உட்கொள்ளலாம் அல்லது தலையில் தடவலாம்.இதை யூஸ் பண்ணா உங்க தலை முடி கொட்டாது.அடர்த்தியாக வளரும். மனதை நிம்மதியாக வைத்தால் போதும். உணவு முறையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆயுர்வேத முறையில் முகம் பளபளப்பு | Ayurvedic diet for glowing skin
உங்கள் முகம் இயற்கையாக அழகாக இந்த முறையை செய்தால் முகம் பொலிவாகும்.மஞ்சள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமையலில் மஞ்சள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இரத்த சுத்திகரிப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகள் போன்ற அதன் பண்புகளுக்கு பெயர் பெற்றது. மஞ்சள் முகப்பரு, தழும்புகள், நிறமி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நீங்கள் சமைத்த உணவில் மசாலாப் பொருளாக மஞ்சளைச் சேர்க்கலாம் அல்லது இரவில் மஞ்சள் கலந்த பாலை அருந்தலாம். அரிசித் தூள், பச்சைப் பால் அல்லது தக்காளிச் சாறுடன் கலந்து முகமூடியாகவும் பயன்படுத்தலாம். மஞ்சள் அனைத்து வாதம் , பித்தம் , கபம் அனைத்தும் சரி செய்து முகத்துக்கு பொலிவூட்டும். மஞ்சள் மட்டும் இல்லை இன்னும் சில மூலிகைகள் இருக்கு அதையும் யூஸ் பண்ணுங்க .
ஆயுர்வேத முறையில் மனஅழுத்தம் குறைக்கும் யோகா & உடற்பயிற்சி | Ayurvedic yoga for stress relief
குறைந்தது 10 - 15 நிமிடம் யோகா , நடைப்பயிற்சி அல்லது உங்க வீட்டு வேலையை செய்தாலே போதும். உங்க உடல் மற்றும் மனம் நிம்மதி அடையும்.யோகாவில் பல வகைகள் உண்டு. உங்களுக்கு எது செய்ய முடியும் என்று தோணுதோ அதை செய்யுங்கள். ரொம்ப ரிஸ்க் எடுத்து கை , கால் உடைக்காமல் தியானம் முறையில் கண் முடி ஒரு 10 நிமிடம் உங்க மனதை ஒரு நிலைபடுத்துங்கள் அதுவே உடல் ஆரோக்கியமாக வைக்க உதவும்.மூச்சு பயிற்சி முடிந்தால் செய்யுங்கள்.
ஆயுர்வேத முறையில் மூட்டுவலி சரி செய்வது | Ayurvedic treatment for arthritis pain
செரிமான நெருப்பை சரிசெய்த , உண்ணாவிரதம் மற்றும் சில இயற்கை மருந்துகளால் உடலில் உள்ள அமாவை நீக்கிய பிறகு, வரவிருக்கும் சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உடல் தயாராகிறது.அமாவை அகற்றியவுடன், அபியங்கா மற்றும் கிழி போன்ற ஓலேஷன் சிகிச்சைகள் மற்றும் 8 அல்லது 16 நாட்களுக்கு வாதத்திற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இது பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது.
சிகிச்சைகள் முடிந்தவுடன், நோயாளிக்கு கஷாயம் போன்ற மருந்துகள் அல்லது கஷாயம், மாத்திரைகள் மற்றும் குறிப்பிட்ட சில பொடிகள் கொடுக்கப்படுகிறது.பிறகு நல்ல சத்தான உணவு முறையை சாப்பிடுங்கள்.