நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கட்டுமான பணியை சின்ராசு எம்.பி.ஆய்வு

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கட்டுமான பணியை சின்ராசு எம்.பி.ஆய்வு செய்தார்.

Update: 2023-01-15 09:19 GMT

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கட்டுமானப்பணிகளை சின்ராஜ் எம்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கட்டுமானப்பணிகளை சின்ராஜ் எம்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்லில் அரசு சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அம்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சட்டக்கல்லூரி அமைக்க அரசு உத்தரவிட்டது. கடந்த கல்வியாண்டில் சட்டக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தற்போது, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே இந்த கல்லூரிக்கு ரூ. 93 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, அரசு அனுமதிளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையொட்டி கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடம், கல்லூரி வகுப்பறைகள், கலையரங்கம், மாடல் கோர்ட் மற்றும் மாணவ மாணவிகளுக்கான ஹாஸ்டல்கள் கட்டும் பணியை இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் லோக்சபா எம்.பி.யும், திஷா கமிட்டி தலைவருமான சின்ராஜ் கல்லூரி வளாகத்திற்கு, பொதுப்பணித்துறை என்ஜினியர்களுடன் சென்று கட்டுமானப் ப ணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தரக்கட்டுப்பாடு குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கட்டுமான  பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு கெண்டும் வரவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுவரை வழங்கினார். அப்போது  மாவட்ட திஷா கமிட்டி உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News