நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

நாமக்கல்லில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமுறை மீறி இயக்கிய 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 12:45 GMT

பைல் படம்.

நாமக்கல் வடக்கு ஆர்டிஓ அலுவலகமோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன் மற்றும் கவிதா ஆகியோர் நாமக்கல் பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக கார் ஓட்டி வந்த 45 வாகன உரிமையாளர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அவர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாமக்கல் வடக்கு ஆர்டிஓ அலுவலக கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் ராசிபுரம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய வாகன தனிக்கையின் போது, 789 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

பல்வேறு விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கிய 170 வாகன உரிமையாளர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அவர்களிடம் இருந்து அபராதம் மற்றும் வரியாக ரூ.5.06 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

மேலும், போதிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 11வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வடக்கு ஆர்டிஓ முருகேசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News