சேலம்-கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பர்மிட்டில் உள்ள ஊர்கள் வழியாக செல்ல ஆர்டிஓ உத்தரவு!

Namakkal news- சேலம்-கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் முறையாக இயக்கப்பட வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-10-06 10:15 GMT

Namakkal news-சேலம்-கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பர்மிட்டில் உள்ள ஊர்கள் வழியாக செல்ல ஆர்டிஓ உத்தரவு ( மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- சேலம்-கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் முறையாக இயக்கப்படவேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

சேலம் - கரூர் மார்க்கமாக செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பர்மிட்டில்உள்ள வழித்தடமான மல்லூர், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், புதன்சந்தை, பரமத்தி, தளவபாளையம் ஆகிய ஊர்களின் வழியாக சென்று பஸ் நிறுத்தங்களில், நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்காமல், பைபாஸ் ரோடு வழியாகச் செல்வதால் பள்ளி கல்லூரி மாணவ மணவியர், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை சரி செய்யவும், அனைத்து பஸ்களும் தங்களுக்கான அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக சென்று, குறிப்பிட்ட நிறுத்தங்களில் மக்களை ஏற்றி இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி நல அறக்கட்டளை மற்றும் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவின் அடிப்படையில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சேலம்-கரூர் மார்க்கமாக செல்லும் பல பஸ்கள் பைபாஸ் ரோடு வழியாக செல்வது கண்டறியப்பட்டு, பஸ் உரிமையாளர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மோட்டார் வாகன விதிகளை மீறி, பர்மிட்டில் உள்ள ஊர்களுக்கு செல்லாமல் பைபாஸ் வழியாக செல்லும் பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பரமத்தி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பரமத்தி நகர பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News