நல்லூர் பகுதியில் 8ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

Namakkal news- ப.வேலூர் தாலுகா நல்லூர் பகுதியில் வரும் 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-10-06 10:15 GMT

Namakkal news- வரும் 8ம் தேதி மின்தடை ( மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- ப.வேலூர் தாலுகா நல்லூர் பகுதியில் வரும் 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் கோட்டத்தில் சீரான முறையில் மின்சாரம் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நல்லூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், நடந்தை, திடுமல், தி. கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல் சாத்தம்பூர், சித்தாளந்தூர், பெருங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 8ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News