நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முப்பெரும் விழாவில் துணை வேந்தர் பங்கேற்பு

Namakkal Veterinary College Vice-Chancellor's participation in the triennial ceremony

Update: 2022-07-31 02:15 GMT

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற, முப்பெரும் விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, கல்லூரி விடுதி நாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் செல்வராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது, கால்நடை மருத்துவ படிப்பின் சிறப்புகளையும், கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் விளக்கி பேசினார். பல்கலை பதிவாளர் டென்சிங் ஞானராஜ், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.

நகைச்சுவை பேச்சாளர் புலவர் ராமலிங்கம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்மன்ற அமைப்பாளர் பேராசிரியர் அகிலா, தமிழ்மன்ற அறிக்கை வாசித்தார். முன்னதாக, பெற்றோரை அதிகம் பேணுவது மகளா, மகனா என்ற தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நாமக்கல், தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குழந்தைவேலு துவக்கி வைத்தார். பேராசிரியர் அரசு பரமேசுவரன், பட்டிமன்ற நடுவராக கலந்து கொண்டார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Similar News