நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை : தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2024-10-22 09:00 GMT

நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை :தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்,

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமத்தி ரோடு, செலம்பகவுண்டர் பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, ஆள்உயர வென்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. அதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், கார் மூலம் நாமக்கல் வந்தார். மதியம், 1:40 மணிக்கு நடந்த சிலை திறப்பு விழாவுக்கு, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.

தமிழக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிலையில் பீடத்தின் மீது ஏறி, கருணாநிதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பொதுமக்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர் காரில் ஏறிய அவர் ஃபுட் போர்டில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைதுக்கொண்டே சென்றார். அப்போது, அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, நாமக்கல் சுற்றுலா மாளிகைக்கு கார் மூலம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு ஓய்வு எடுத்தார்.


முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, சேலம் முதல், நாமக்கல் வரை, நெடுஞ்சாலை முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாமக்கல் நகர எல்லைக்குள், வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா நடந்த நாமக்கல், பரமத்தி ரோடு பகுதியில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சேலத்தில் இருந்து நாமக்கல் வரை வழிநெடுகிலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று, முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். முன்னதாக, மாவட்ட எல்லையில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திரளான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News