டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி மண் திட்டில் சரிந்து விழுந்து உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி மண் திட்டில் சரிந்து கீழே விழுந்து பலியானார்.;
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி மண் திட்டில் சரிந்து கீழே விழுந்து பலியானார்.
ஈரோடு மாவட்டம், பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிலை வியாபாரி செல்வம் (வயது 55) இவர் வெற்றிலை வியாபாரம் சம்பந்தமாக பல ஊர்களுக்கு சென்று விட்டு, குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கொட்டி வைத்திருந்த மண் குவியலில், தனது ஹீரோ டீலக்ஸ் டூவீலரை விட்டதில், சரிந்து கீழே விழுந்து அருகில் உள்ள இரும்பு போர்டில் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து இவரது மகன் கண்ணன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.