குமாரபாளையம் அருகே விசைத்தறி கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே விசைத்தறி கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.;

Update: 2024-10-22 11:00 GMT

குமாரபாளையம் அருகே விசைத்தறி கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசித்து வந்தவர் விசைத்தறி கூலித் தொழிலாளி அருண்குமார் (வயது 27) இவர் நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் கல்லங்காட்டுவலசு பகுதியில் உள்ள தான் வேலை செய்யும் விசைத்தறி பட்டறைக்கு மாலை 03:15 மணியளவில் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து அவர் வேலை செய்யும் பட்டறையிலிருந்து, உடன் வேலை செய்யும் நபர்கள் மூலம், அருண்குமார் மனைவி புவனேஸ்வரிக்கு, அருண்குமார் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. உடனே குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது, அருண்குமார் உடல் அங்கு வைக்கபட்டிருந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புவனேஸ்வரி புகார் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன் காதல் கலப்பு திருமணம் ஆனது என்றும், இவர்களுக்கு கவிநயா(வயது 8) ஜோசியா( 6,)  என இரு பெண் குழந்தைகள் உள்ளனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News