நாமக்கல்லில் வணிக வரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு முகாம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வணிகவரித்துறை சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-08 01:31 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற வணிகர்களுக்கான, ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாமில், வணிக வரித்துறை துணை கமிஷனர் ஜெயா பேசினார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வணிகவரித்துறை சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வணிகவரித்தறை அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிகர்கள் சங்க பிரதிநிதிகளுக்கான, ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வணிக வரி துணை கமிஷனர் ஜெயா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வணிகவரி அலுவலர் யாதவன், சேலம் வணிக வரி ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் அலுவலர் பாரதி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், வணிகர்கள், ஒரு இடத்தில் கொள்முதல் செய்த பொருட்களை, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.

மேலும், ஜி.எஸ்.டி. பில் போடுவதில் உள்ள பிரச்சினைகள், அவற்றை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும், மாதம்தோறும் ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் எப்படிதாக்கல் செய்வது என்பது குறித்து வணிகர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வணிகர்களின் சந்தேகங்களுக்கு, வணிக வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வணிகர் சங்க பேரமைப்பின், மாநில துணைத்தலைவர் பெரியசாமி, பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான வணிகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News