நகர்ப்புற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள்: எம்.பி பேச்சு

நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2021-11-26 03:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பேசினார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுைகயில், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 200 நாட்களில் வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளார். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ்வசதி, பால் விலை குறைப்பு, உதவித்தொகை, பல இடங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேடர்பாளையம் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எனவே விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். பொதுமக்கள் தமிழக அரசின் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறுவது உறுதி என்று கூறினார்.

கூட்டத்தில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைய பாடுபட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும், திமுக இளைஞரணி செயலாõளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒரு மாதம் முழுவதும் கொண்டாடி, மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதென்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுது.

முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன், நக்கீரன், பவித்திரம் கண்ணன், டாக்டர் மாயவன், நகர பொறுப்பளர்கள் ஆனந்தன், சிவகுமார், பூபதி, சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலசுப்ரமணியம், நவலடி, பாலச்சந்திரன், மகளிரணி ராணி, இளைஞரணி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News