நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி நிலம் மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, நிலம் மீட்பு இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-13 11:30 GMT

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நிலம் மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, நிலம் மீட்பு இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூர் கெமிக்கல் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்துக்கு, 1975ல், சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பதற்காக, நாமக்கல் மாவட்டம் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான, 67 ஏக்கர் நிலம் குறைந்த இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சரியான, நியாயமான இழப்பீடு வழங்கக் கோரி, சேலம் கோர்ட்டில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய நீதிமன்றம், இழப்பீட்டை சரியாக உயர்த்தி வழங்கவும், அந்த தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு, 12 வாரங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

கோர்ட் தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றி, குத்தகைக்கான இழப்பீட்டையும், நிலத்தையும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிலம் மீட்பு இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. விவசாயிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிலம் மீட்பு இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News