திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க கோரிக்கை

திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-02 02:00 GMT

பைல் படம்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், கரும்பு பயிர் காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கணிசமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பில் நோய் தாக்கி சோகை காய்ந்து அழியும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கொல்லப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நடேசன் கூறுகையில், கொல்லப்பட்டி மற்றும் திருச்செங்கோடு தாலுகாவில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் புதிதாக கொக்கோ பைன் என்ற நோய் தாக்குதால் காணப்படுகிறது.

இதனால் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு கரும்பு பயிர் முழுவதுமே அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் சந்தியூர் கேவிகே வேளாண்மை விஞ்ஞானிகள் நேரில் வந்து நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தனர். எனினும் அந்நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை தற்போ பயிர் வளர்ச்சி முற்றிலும் குன்றி மண்ணோடு மண்ணாக கருகிய சோகை போல கரும்பு கட்டை காய்ந்து அழுகிவிட்டது. இந்த வகையான நோய் தாக்குதல் இப்பகுதியில் இதுதான் முதல் முறை. இந்த நோயினால் விவசாயிகளுக்கு 100 சதவீதம் விளைச்சல் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விவசாயிகளுக்கு கரும்பு பயிரில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News