காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா

மோகனூர் காந்தமலை முருகன் கோயில் மற்றும் நாமக்கல் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-05-02 02:00 GMT

நாமக்கல் ச.பே.புதூர் செல்வ விநாயகர் கோயிலில் நடைபெற்ற, குரு பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மோகனூர் காந்தமலை முருகன் கோயில் மற்றும் நாமக்கல் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு, குரு பகவான் மே 1ம் தேதி மாலை 5:19 மணிக்கு, மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார்.

அதையடுத்து, மாலை, 4 மணி முதல், காந்தமலை முருகன் கோயில் வாளகத்தில் உள்ள குரு பகவானுக்கும், மேதா குரு தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இந்த குரு பெயர்ச்சியில் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள், பரிகாரம் செய்தால், நன்மை பயக்கும் என்பது ஐ தீகம். அதன்படி பலர் பரிகாரம் செய்தனர். மோகனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

* நாமக்கல், சந்தைபேட்டைபுதூர் செல்வ விநாயகர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மாலை 3 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், குரு பகவான் மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 4:30 மணிக்கு மகா அபிஏஷகம், தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது. 5:19 மணிக்கு, குரு பகவானுக்கு மகா பூஜை, தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் நகரம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News