நாமக்கல் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

Gram Sabha Meeting -நாமக்கல் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பங்கேற்றார்.

Update: 2022-10-03 00:30 GMT

நாமக்கல் அருகே நடந்த கிராம சபை  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பங்கேற்றார்.

Gram Sabha Meeting -நாமக்கல் மாவட்டம் அரூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வைகயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர் பஞ்சாயத்து, நத்தமேடு ஊராட்சி துவக்கப்பள்ளியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப் பணிகள், கிராம தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பில் ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி, பேசினார். அப்போது அவர் பேசினார்.

வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இணைக்காத பொதுமக்கள் அனைவரும், கிராம நிர்வாக அலுவலகத்தில், உரிய படிவத்தில் கையொப்பமிட்டு, ஆதார் அட்டை நகல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். தற்போது நடந்த கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், பஞ்சாயத்து உதவி இயக்குனர் கலையரசு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம பொதுமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News