காலை சிற்றுண்டி திட்டம்: மாவட்டத்தில் 51 அரசு பள்ளிகளில் 3,183 குழந்தைகள் பயன்பெறுவர்

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 51 பள்ளிகளைச் சேர்ந்த, 3,183 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

Update: 2022-07-29 13:30 GMT

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 1 முதல், 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில், 1 முதல், 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். இதற்கான உத்தரவை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக, நாமக்கல் நகராட்சியில் உள்ள 3 துவக்கப்பள்ளிகள், திருச்செங்கோடு நகராட்சியில் 7, மலைகிராமமான கொல்லிமலையில் உள்ள 41 துவக்கப்பள்ளிகள் என மொத்தம் 51 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் நகராட்சியில் உள்ள கோட்டை துவக்கப்பள்ளி, பதிநகர் துவக்கப்பள்ளி, சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள உருது துவக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் படிக்கும், 989 குழந்தைகள் பயன்பெறுவர். திருச்செங்கோட்டில், 7 நகராட்சி துவக்கப்பள்ளிகளில் 484 குழந்தைகள், கொல்லிமலையில் 41 துவக்கப்பள்ளிகளில், 1,710 குழந்தைகள் என மொத்தம் 3,183 குழந்தைகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

Tags:    

Similar News