காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து நாமக்கல்லில் பாஜக ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-05 07:40 GMT

காஷ்மீரில் நடைபெற்ற தீவீரவாத தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல்லில் மாவட்ட பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்தும், அதற்காக தமிழகத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து, பாஜவினர் மீது பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்தும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் தினேஷ்குமார், மாநில விவசாயிகள் பிரிவு துணைத்தலைவர் சத்தியபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், முன்னாள் இளைஞரணி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீவிரவாத செயல்களைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினார்கள்.

மாவட்ட பாஜ பொதுச்செயலாளர்கள் ரவி, முத்துக்குமார், சேதுராமன், நகர பொதுச்செயலாளர் சதீஷ், நகர செயலாளர் வேல்ராஜ் பெரியசாமி, சூரியசந்திரன், பொருளாளர் மணிவேல்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் அருள், மகளிர் அணி திவ்யா, ஜெயந்தி, சித்ரா உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Similar News